கட்சியில் இருந்து விலகுவதாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் ஹர்திக் படேல் அறிவிப்பு

காந்திநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் ஹர்திக் படேல் அறிவித்து உள்ளார்.  குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹர்திக் படேல் விலகியுள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, இன்று நான் தைரியமாக காங்கிரஸ் கட்சியின் பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது முடிவை எனது சகாக்கள் மற்றும் குஜராத் மக்கள் அனைவரும் வரவேற்பார்கள் என்று நான் நம்புகிறேன். எனினும், எதிர்காலத்தில் குஜராத்திற்கு மிகவும் சாதகமாக செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் எழுதியுள்ள படேல் கூறியதாவது, காங்கிரஸ் கட்சியை சரியான திசையில் வழிநடத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கட்சி தொடர்ந்து எனது நாடு மற்றும் நமது சமூகத்தின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. நமது நாட்டின் இளைஞர்கள் வலிமையான மற்றும் திறமையான தலைவரை விரும்புகிறார்கள். ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியும் அதன் ஒன்றிய மற்றும் மாநிலத் தலைமையும் எல்லாவற்றையும் எதிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதை நான் கண்டேன். அதேசமயம் மக்கள் எப்போதும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் மற்றும் இந்தியாவைக் கைப்பற்றும் திறன் கொண்ட ஒரு மாற்றைத் தேடுகிறார்கள் என தெரிவித்துள்ளார். ஹர்திக் படேலின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: