ஆந்திராவில் மதுபாட்டில்களை கடனுக்கு தர மறுத்த கடை ஊழியருக்கு அடிஉதை...மூன்று இளைஞர்களை தேடிவருகிறது காவல்துறை

ஆந்திரா: ஆந்திராவில் மதுபாட்டில்களை கடனுக்கு தர மறுத்த ஆத்திரத்தில் கடைக்குள் புகுந்து ஊழியரை இளைஞர்கள் அடித்துஉதைத்துள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் உள்ள கோபுவானிபாளையத்தில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கிவருகிறது.

இந்தநிலையில் நேற்று மாலை அந்த அரசு மதுபான கடைக்கு மூன்று இளைஞர்கள் மது அருந்த சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் பணம் இல்லாததால் அரசு மதுபான கடையில் பணிபுரியும் ஊழியரிடம் எங்களுக்கு கடனாக மதுபானங்கள் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு கடை ஊழியர் கடனுக்கு மதுபானங்களை தர முடியாது என்று கூறியுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள், அரசு மதுபான கடை ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அந்த கடை ஊழியர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து அரசு மதுபான கடை ஊழியர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடைப்படையில் இளைஞர்கள் கடைக்குள் புகுந்து சரமாரியாக தாக்கிய காட்சிகள் சிசிடிவியில் பதிவானதை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த மூன்று இளைஞர்களும் தற்போது தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: