சாலை தடுப்புச்சுவர் அமைக்க ரூ.5,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது

குன்னூர்: கோவையை சேர்ந்த செந்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான இடம் நீலகிரி மாவட்டம் குன்னூர் பெட்டட்டியில் அமைந்துள்ளது. அங்கு சாலையை ஒட்டி செந்தில் முருகன் தடுப்புச்சுவர் கட்டியுள்ளார். ஆக்கிரமிப்பு என கூறி தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டது. மீண்டும் தடுப்புச்சுவர் கட்ட செந்தில்முருகன் நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் நித்யாவை (38) அணுகினார். அவர் ரூ.5 ஆயிரம் தந்தால் அனுமதி அளிப்பதாக கூறி உள்ளார். இதுபற்றி செந்தில்முருகன் புகாரின்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்தனுப்பினர். அவரிடம் அந்த பணத்தை வாங்கிய நித்யாவை  லஞ்ச ஒழிப்பு போலீசார்  கைது செய்தனர்.

Related Stories: