×

திரிபாதி அதிரடியில் சன்ரைசர்ஸ் ரன் குவிப்பு

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராகுல் திரிபாதியில் அதிரடி ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபாரமாக ரன் குவித்தது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். அபிஷேக் ஷர்மா, பிரியம் கார்க் இருவரும் சன்ரைசர்ஸ் இன்னிங்சை தொடங்கினர். அபிஷேக் 9 ரன் எடுத்து சாம்ஸ் பந்துவீச்சில் மார்கண்டே வசம் பிடிபட்டார். அடுத்து பிரியம் கார்க் உடன் ராகுல் திரிபாதி இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி மும்பை பந்துவீச்சை பதம் பார்க்க, சன்ரைசர்ஸ் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்தது. கார்க் 42 ரன் (26 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ரமண்தீப் சிங் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து, திரிபாதி - நிகோலஸ் பூரன் இணைந்து பவுண்டரியும், சிக்சருமாகப் பறக்கவிட்டு அமர்க்களப்படுத்தினர். திரிபாதி 32 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 76 ரன் சேர்த்தது. பூரன் 38 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), திரிபாதி 76 ரன் (44 பந்து, 9 பவுண்டரி 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். மார்க்ரம் 2 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். சுந்தர் 9 ரன்னில் ஆட்டமிழக்க, சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை பந்துவீச்சில் ரமண்தீப் சிங் 3 ஓவரில் 20 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றினார். சாம்ஸ், ரைலி மெரிடித், ஜஸ்பிரித் பும்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 194 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.

Tags : Sunrisers run accumulation in Tripathi action
× RELATED உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் ஒரு...