ஜெய்பீம் பட விவகாரம் இயக்குநர் ஞானவேல், நடிகர் சூர்யா மீது வழக்கு

சென்னை: வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர்  ருத்ர வன்னியர் சேனா நிறுவன தலைவராக உள்ளார். இவர் வேளச்சேரி போலீசில், ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவை இழிவுபடுத்தும் வகையிலும் காட்சிகள் அமைந்திருப்பதாக கூறி, கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அன்று வேளச்சேரி போலீசில் புகார்  அளித்திருந்தார். இப்புகாரின்பேரில், சட்டப்படி நடவடிக்கை எடுக்ககோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

இதனையடுத்து, கடந்த 29ம் தேதி சம்பந்தப்பட்ட போலீசாருக்கு, அப்படத்தின் இயக்குநர்  ஞானவேல், நடிகர் சூர்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய  நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்நிலையில், நேற்று வேளச்சேரி போலீசார் ஜெய்பீம் திரைப்பட இயக்குநர் ஞானவேல், நடிகர் சூர்யா மீது, இன உணர்வுகளை தூண்டியதாக 295 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: