திருத்தணியில் விசைத்தறி நெசவாளர்கள் ஸ்டிரைக்

சென்னை: பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம், மத்தூர், காளிகாபுரம், புச்சிரெட்டிபள்ளி, சொரக்காய்பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை, ஆர்.கே.பேட்டை, விடியங்காடு உட்பட 40க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் நெசவாளர்கள் லுங்கி, சுடிதார், வேஷ்டி, சேலை உற்பத்தி செய்து வருகின்றனர்.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சு நூல் விலை சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருவதால் நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். திருத்தணி பகுதியில் 40க்கும் மேற்பட்ட பகுதிகளில் உற்பத்தியாளர்களுடன் இணைந்து நெசவாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3வது நாளாக இன்று வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. 

Related Stories: