கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்: கட்டாய மதம் மாற்றம் செய்தால் 3 ஆண்டு சிறை

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். மதமாற்ற தடை சட்டமசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இலவச கல்வி, வேலைவாய்ப்பு என ஆசை காண்பித்து மதமாற்றம் செய்தால் 3 ஆண்டுகள் சிறை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா கர்நாடக சட்டசபையில் கடந்த 2021-ம் ஆண்டு பெலகாவியில் நடைபெற்ற கூட்டத்தொடரில் காங்கிரசின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.

அந்த மசோதா மேல்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அவசர சட்டத்தின்படி, கட்டாய மதம் மாற்றம் உறுதி செய்யப்பட்டால் தவறு செய்தவருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும். அத்துடன் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: