திண்டுக்கல்: இலங்கை தமிழர்களுக்கு தூத்துக்குடி யாசகர் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறை சேர்ந்தவர் பாண்டி (65). யாசகரான இவர் கொரோனா நிவாரண உதவியாக 10 ஆயிரம் வீதம் பல முறை நிதி உதவி வழங்கியுள்ளார். இவர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார். இலங்கை தமிழர் நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்தை கலெக்டர் விசாகனிடம் வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘நான் பல ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் பணியாற்றினேன். அப்போது அங்கு பல சமூக சேவை செய்துள்ளேன். 2 ஆயிரம் மரங்களுக்கு மேல் நட்டுள்ளேன்.