வெம்பக்கோட்டை அகழாய்வில் பழங்கால குவளை கண்டெடுப்பு

சிவகாசி: வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் ஆன பழங்கால அழகிய குவளை கிடைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இங்கு இதுவரை பழமையான தக்களி, பொம்மைகள், அகல்விளக்கு, புகை பிடிப்பான் கருவி, விலங்குகளின் எலும்புகள், யானை தந்த அணிகலன், சுடுமண் தொங்கட்டான் கிடைத்துள்ளன. நேற்று நடந்த அகழாய்வில் அழகிய குவளை கிடைத்துள்ளது. இது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இது குறித்து வெம்பக்கோட்டை அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ‘வெம்பக்கோட்ைட அகழாய்வில் ஏராளமான பழங்கால பொருட்கள் கிடைத்து வருகின்றன. தற்போது அழகிய குவளை கிடைத்துள்ளது. இங்கு 3 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன’ என்றார்.

Related Stories: