நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி ஒன்றிய அமைச்சர்கள் தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு

சென்னை :நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி ஒன்றிய அமைச்சர்கள் தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள்  சந்திக்கின்றனர். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா, ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரை கனிமொழி தலைமையிலான குழு சந்திக்கின்றது. ஒன்றிய அமச்சர்களை சந்திக்கும் குழுவில் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் இடம்பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது. நூல்விலை உயர்வு காரணமாக பொருளாதார இழப்பை சந்திக்கும் ஜவுளித் தொழிலில் அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. பருத்தி நூல் விலை உயர்வால் நெசவாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பால் போராட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளனர். பருத்தி நூல் விலையை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதல்வர் நேற்று கடிதம் எழுதியிருந்தார்

Related Stories: