முத்தரப்பு குழு அமைத்து நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: பஞ்சு விலை கடந்த ஓராண்டில் மட்டும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் ஜவுளி உற்பத்தி தொழில் அழிவை நோக்கி செல்கிறது. மேலும் இறக்குமதி செய்யும் பருத்தியை பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி நூல் விலை ஏற்றப்பட்டுள்ளதால் ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான விசைத்தறி நெசவாளர்களின் ஜீவாதாரம் அந்தரத்தில் ஊசலாடத் தொடங்கியிருக்கிறது. எனவே பருத்தி பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்கள் அதிகளவில் ஜவுளி தொழிலை சார்ந்துள்ளது. எனவே ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட்டு, நூல் உற்பத்தியாளர்கள், விசைத்தறி சங்கங்கள், அரசு தரப்பு அதிகாரிகள் என முத்தரப்பு குழு அமைத்து நூல் விலையை கட்டுப்படுத்தி ஜவுளி உற்பத்தி மற்றும் நெசவாளர்களின் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும்.

Related Stories: