30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு

பாரீஸ்: கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில்  எலிசபெத் போர்ன் என்ற பெண் அமைச்சர் ஒருவர் பிரதமராக பதவியேற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் அதிபராக இம்மானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டியக்ஸ் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது நாட்டின் புதிய பிரதமராக எலிசபெத் போர்னை (61) இம்மானுவேல் மக்ரோன் நியமித்துள்ளார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்சில் பெண் ஒருவர் பிரதமராக பதவியேற்றுள்ளார். எலிசபெத் போர்ன் பிரதமராவதற்கு முன்பு தொழிலாளர் துறை அமைச்சராகவும் இருந்தார்.

பிரான்ஸில் வரும் ஜூன் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், எலிசபெத் போர்ன் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பெண் ஒருவரை பிரதமர் பதவிக்கு நியமிப்பதால், சமூக பிரச்னைகள், சுற்றுச்சூழல் மற்றும் உற்பத்தி துறை பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியும் என்று அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: