ஜவுளி தொழிலாளர் நலன்காக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: மே முதல் வாரத்தில் ஒரு கிலோ நூலின் விலை ரூ.441. தற்போது ரூ.481. நூல் விலை உயர்வால் ஜவுளித்தொழிலுக்கு ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து பருத்தி, நூல் விலையானது மிக அதிக அளவில் உயர்த்தப்படுவதால் ஜவுளித் தொழில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே ஒன்றிய அரசு, ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: