ஆதிதிராவிடர் பழங்குடியினர் துறைகளில் 10,402 பணியிடங்கள்: முகமைகள் மூலம் நிரப்ப அரசாணை வெளியீடு

சென்னை: 2021-2022ம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டதொடரில் கவர்னர் உரையில் அரசுத்துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள் சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்த தலைமைச்செயலக துறைகளிடமிருந்து பிரிவு வாரியாக உறுதி செய்யப்பட்டு பெறப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில்  ஆதிதிராவிடருக்கு 8,173 இடங்களும், பழங்குடியினருக்கு 2,229 இடங்களும் மொத்தம் 10,402 குறைவு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று அரசாணையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டது. இந்த பணியிடங்களை முகமைகள் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: