அதிகாரிகள் காட்டிய எஃப்ஐஆரில் எனது பெயர் குறிப்பிடப்படவில்லை: சி.பி.ஐ. சோதனை குறித்து ப.சிதம்பரம் விளக்கம்..!

டெல்லி: சோதனை முடிவில் வீட்டில் இருந்து எதுவும் அவர்கள் கைப்பற்றவில்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரம் வீட்டில் மட்டுமன்றி காங்கிரஸ் எம்.பி.யும் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சோதனை முடிவில் வீட்டில் இருந்து எதுவும் அவர்கள் கைப்பற்றவில்லை என ப.சிதம்பரம் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; சென்னை, டெல்லியில் உள்ள எனது வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்கள் காட்டிய எஃப்ஐஆரில் எனது பெயர் குறிப்பிடப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையில் தன்னுடைய பெயர் இல்லாவிட்டாலும், எனது வீட்டில் சோதனை நடைபெறுகிறது. சோதனைக்காக சிபிஐ வந்த நேரம் சுவாரஸ்யமானது. சிபிஐ அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையில் இதுவரை எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: