தமிழகத்தில் பல பகுதிகளில் கத்திரி வெயில் வாட்டி வரும் நிலையில பல்வேறு இடங்களில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

தருமபுரி: தமிழகத்தில் பல பகுதிகளில் கத்திரி வெயில் வாட்டி வரும் நிலையில பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மூன்றாவது நாளாக ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. அரூர், கடத்தூர், மொரப்பூர், பெண்ணகரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீடித்ததால் வெப்பம் தனிந்தது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்கு குளிர்ந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.

மதுரையில் வெயில் வாட்டிய நிலையில் நிலையில் திடீரென கோடை மழை கொட்டியது மாநகர பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் சாலையில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி பட்டனர். சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.

தொடர் மழையால் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ஆனைமதகு தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

சேலத்தில் மூன்று நாளாக தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாநகரில் குளிர்ச்சியான தட்பவெட்பநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பகல் நேரங்களில் கூட குளிர்ச்சியான காற்று வீசி வருகிறது. இந்த மழைக்கு முன்னதாக, வெயிலின் தாக்கத்தில் அவதியடைந்த மக்கள், குளிர்காற்று வீசுவதால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: