10 ஆண்டுகள் நிறைவில் 6ஜி சேவைகளை தொடங்க முடியும்: டிராய் அமைப்பின் வெள்ளி விழாவில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: ஐஐடி சென்னை தலைமையிலான 8 கல்வி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள 5ஜி பரிசோதனைக் கருவியை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். பல நாடுகளில்  5ஜி நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்தியாவை பொறுத்தவரை இன்னும் 5ஜி சேவை நடைமுறைக்கு வரவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி சேவை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அலைக்கற்றை ஏலமும் இன்னும் ஓரிரு மாதங்களில் விடப்பட்டும் என ஒன்றிய அரசு தெரிவித்த்துள்ளது. இந்நிலையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தனித்துவமான 5ஜி அலைக்கற்றை அலைவரிசை சோதனை கருவியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக வெளியிட்டுள்ளார்.

இந்திய தோலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் 1997ல் துவங்கப்பட்டது. அதனுடைய 25ம் ஆண்டு நிகழ்வு இன்று கொண்டாடப்படுகிறது. அதில் பங்கேற்ற பிரதமர் இந்த 5ஜி அலைக்கற்றை சோதனையை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய பிரதமர் மோடி; 5ஜி பரிசோதனைக் கருவியை உருவாக்கியுள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் ஐஐடிக்கு வாழ்த்து தெரிவித்தார். 8 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் ஏராளமான புதிய ஆற்றலை உட்புகுத்தி உள்ளோம். மொபைல் போன் ஏற்றுமதியில் புதிய உச்சம் அடைந்துள்ளோம்.

5ஜி தொழில்நுட்பம் நாட்டின் பொருளாதாரத்தின் சுமார் 450 பில்லியன் டாலர் பங்கு வகிக்கும். 5ஜி தொழில்நுட்பம் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான விஷயம். நாட்டில் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க வேண்டும். 10 ஆண்டுகள் நிறைவில் 6ஜி சேவைகளை தொடங்க முடியும். 6ஜி தொழில்நுட்ப சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: