ஆம்பூர் அருகே நாய்க்கனேரி மலைகிராமத்தில் கனமழையால் விவசாய நிலங்களில் மழைநீர்: காட்டாற்றில் திடீர் வெள்ளபெருக்கு

ஆம்பூர்: ஆம்பூர் அருகே நாய்க்கனேரி மலைகிராமத்தில் நேற்று பெய்த கனமழையால் காட்டாற்றில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் பயிர்கள் நாசமானது. ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று மதியம் முதல் சில்லென்று காற்று வீசியது. இதை தொடர்ந்து நேற்று மாலை கனமழை  பெய்தது. ஆம்பூர் அடுத்த நாய்க்கனேரி மலைகிராமத்தில் பெய்த கனமழையால் காட்டாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் மழைவெள்ளம் கரை புரண்டு ஒடியதில் அருகில் கம்பிகொல்லையில் இருந்த ஆனைமுகன் மடுகு தடுப்பணை நிரம்பியது.

இதில் உபரி நீர் வெளியேறி கம்பிகொல்லை, ஆசாத்நகர், கே.எம் சாமி நகர், சிவராஜபுரம் வழியாக சென்றது. முன்னதாக மழை வெள்ளம் காரணமாக நாய்க்கனேரி ஊராட்சியி லுள்ள புதூர், சீக்க ஜூனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்தது. இதில் அங்கு பயிரிடபட்டிருந்த நெல், வாழை, பூக்கள் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. இதுகுறித்து வருவாய் துறையினர் மற்றும் வேளாண்மை துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: