மூதாட்டியிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு வலை

பொன்னேரி: பொன்னேரி திருவேங்கடபுரத்தை சேர்ந்தவர் மணிகண்ணன்(65), ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி ஜெயக்குமாரி(60), நேற்று முன்தினம் மாலை பொன்னேரி பஜாருக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஜெயக்குமாரியின் கழுத்தில் இருந்த 6 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார். இதுகுறித்து ஜெயக்குமாரி பொன்னேரி போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: