விபத்தில் சிறுமி காயம்

திருவள்ளூர்: அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மகள் யுகா(13). வாய் பேசாத மற்றும் காதுகேட்காத மாற்றுத்தினாளி. சிறுமிக்கு உதவித்தொகை பெற மக்கள் குறைதீர்க்கும் நாள் கட்டத்தில் கோரிக்கை மனு அளிப்பதற்காக தாயும், மகளும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது, கலெக்டர் அலுவலகம் சென்றபோது எதிர்பாரத விதமாக தாயும், மகளும் தவறி கீழே விழுந்தனர். அப்போது, அலுவலகத்திற்குள் வந்த வாகன டயரில் சிறுமியின் கால் சிக்கி லேசான காயமடைந்தாள். உடனே அங்கிருந்தோர் மீட்டு கலெக்டர் அலுவலகத்திற்குள் கொண்டு சென்றனர். அப்போது, அங்கு வந்த கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் டாக்டர் என்பதால் சிறுமியின் காலை பார்த்து பரிசோதனை செய்தார். அப்போது, லேசான காயம் தான் என்று கூறி உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் வரவைத்து திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Related Stories: