மக்கள் குறைதீர் கூட்டம் நரிகுறவர் மக்களுக்கு நலவாரிய அட்டை: கலெக்டர் வழங்கினார்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 279 மனுக்களை பெற்று, அதனை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி உரிய தீர்வு காண கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உத்திரமேரூர் வட்டம், வயலூர் கிராமத்தை சேர்ந்த 12 பேருக்கு நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர் அட்டைகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: