காஞ்சியில் திடீர் மழை

காஞ்சிபுரம்: கத்திரி வெயில் தொடங்கி, கடந்த சில நாட்களாக தினமும் அனல் காற்று வீசியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். முதியோர், குழந்தைகள், நோயாளிகள் என பலரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். இந்தவேளையில், கடந்த சில நாட்களாக, காஞ்சிபுரம் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை வெயில் சுட்டேரித்தது. பின்னர், லேசான தூரலும், வெயிலும் என மாறி மாறி காலநிலை மாற்றமாக இருந்தது. மாலை 4 மணியளவில், திடீரென கருமேகம் சூழ்ந்து கனமழை பெய்தது. சுமார் ஒன்றரை மணிநேரம் பெய்த மழையால் காஞ்சிபுரம் பஸ் நிலையம், பழைய ரயில் நிலைய சாலை, ராஜவீதி, ஓரிக்கை உள்பட பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

Related Stories: