திருப்பதியில் கங்கனா தரிசனம்

சென்னை: பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் நேற்று திடீரென திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தமிழில் வெளியான தலைவி படத்திற்கு பிறகு கங்கனா தற்போது தாக்கட் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இது ஹாலிவுட் பாணியிலான ஆக்‌ஷன் படம். இந்த படத்தில் அவருடன் அர்ஜுன் ராம்பால், திவ்யா தத்தா நடித்துள்ளனர். வருகிற 20ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் வெற்றியை மிகவும் எதிர்பார்க்கும் கங்கனா, படத்தின் வெற்றிக்கான வேண்டுதலுக்காக திருப்பதி சென்றதாக கூறப்படுகிறது. பட்டுப்புடவை அணிந்து அதிகாலையில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: புனிதமான இந்த நாளில் எனது படமான தாக்கட் தயாரிப்பாளர் தீபக்முகுத்ஜி அவரது மனைவி கிருஷ்ணா முகுத்ஜி மற்றும் சில நண்பர்களுடன் திருப்பதி பாலாஜியை தரிசனம் செய்தேன். இதற்கான ஏற்பாடுகளை செய்த விஷ்ணு மஞ்சுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தெய்வீக தரிசனத்திற்குப் பிறகு ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Related Stories: