பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன்

சென்னை: பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம், ஜூன் 3ம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க கமல்ஹாசன் முடிவு செய்திருக்கிறார். பா.ரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு விக்ரம் நடிக்கும் மைதானம் படத்தை அவர் இயக்குகிறார். இதற்கு பிறகு கமல்ஹாசனை ரஞ்சித் இயக்குவது உறுதியாகியுள்ளது. ‘நட்சத்திரம் நகர்கிறது, மைதானம் படங்களை முடித்த பிறகு அடுத்த ஆண்டில் கமல்ஹாசனை இயக்குகிறேன். இந்த படத்துக்கான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டே நடந்தது. இப்போதுதான் படம் தொடங்குவதற்கான ஆயத்த வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது’ என ரஞ்சித் தெரிவித்தார்.

Related Stories: