ஜூலையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள்

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதம்  வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு  வாரியம் தெரிவித்துள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1, ஆகிய பணிகளின் நேரடி நியமனத்துக்காக நடந்த போட்டித் தேர்வின் உத்தேச விடைக்குறிப்பு கடந்த  ஏப்ரல் 9ம் தேதி வெளியிடப்பட்டது. அதுகுறித்து ஆட்சேபனைகளை ஏப்ரல் 13ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, 29 ஆயிரத்து 141 பேர் ஆட்சேபணை தெரிவித்துள்ளனர். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்முறை தேர்வு மற்றும் பருவத் தேர்வுகள் நடப்பதால் பகுதியாக, பாடவாரியாக மட்டுமே பாட வல்லுநர்கள் அழைக்கப்பட்டு விடைக்குறிப்பை மறு ஆய்வு செய்து வருகிறோம். இந்த பணி முடிய இன்னும் ஒரு மாதம் ஆகும். இந்தப் பணி முடிந்ததும் இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படும். அதன்பின் விடைத்தாள்கள் கணினி வழி திருத்தம் செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதற்கு குறைந்த பட்சம் 45 நாட்கள் தேவைப்படும். அதற்கு பிறகு சான்று சரிபார்ப்புக்கு குறைந்த பட்சம் ஒரு மாதம் ஆகும். இதனால் மேற்கண்ட பணியிடங்களுக்கான தெரிவுப் பட்டியல் ஜூலை இறுதியில் வெளியிடப்படும்.

Related Stories: