சில்லி பாயின்ட்...

* ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஷிம்ரோன் ஹெட்மயர் (வெஸ்ட் இண்டீஸ்) தனது மனைவியின் முதல் பிரசவத்தின்போது உடன் இருப்பதற்காக கயானா சென்றார். அதனால் இடையில் டெல்லி, லக்னோ அணிகளுக்கு எதிரான லீக் ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. இந்நிலையில், ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து அவர் இந்தியா திரும்புகிறார். சென்னைக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெறும்  ஆட்டத்ததில் ஹெட்மயர் களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

* மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடக்கும் சப்-ஜூனியர் மகளிர் ஹாக்கிப் போட்டியில் தமிழ்நாடு முதல் ஆட்டத்தில் அருணாச்சல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. நேற்று நடந்த 2வது லீக் ஆட்டத்தில் சண்டிகரிடம் 0-10 என்ற கோல் கணக்கில் படுதோல்வியை சந்தித்து ஏமாற்றமளித்தது.

* வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  கருணரத்னே தலைமையிலான இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

* ஐபிஎல் போட்டிக்கு இடையில் பிளே ஆப் சுற்றின்போது நடத்தப்படும் ‘மகளிர் டி20 சவால்’ கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நடத்தப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றின் போது மகளிர் டி20 போட்டி புனேவில் நடைபெற உள்ளது. இதில்  பங்கேற்கும் 3 அணிகளில் வெலாசிட்டி கேப்டனாக இருந்த  மிதாலி ராஜுக்கு பதில் தீப்தி சர்மாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியிலும் மிதாலி பெயர் இடம் பெறவில்லை. மற்ற 2 அணிகளான  டிரெய்ல் பிளேசர்ஸ் கேப்டனாக ஸ்மிரிதி மந்தனா,  சூப்பர் நோவாஸ் கேப்டனாக  ஹர்மன்பிரீத் கவுர் தொடர்கின்றனர்.

* சட்டோகிராமில் நேற்று முன்தினம் தொடங்கிய முதல் டெஸ்டில்  டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை, முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்திருந்தது. 2ம் நாளான நேற்று அந்த அணி 397 ரன் குவித்து ஆல் அவுட்டானது (153 ஓவர்). ஏஞ்சலோ மேத்யூஸ் 199, சண்டிமால் 66, குசால் 54 ரன் எடுத்தனர். வங்கதேசம் தரப்பில்  நயீம் ஹசன் 6 விக்கெட், ஷாகிப் ஹசன் 3, தைஜுல் இஸ்லாம் 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 76 ரன் எடுத்துள்ளது.

Related Stories: