பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் சர்வேயர் கைது

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் ஜோசப். இவர் வீட்டு மனை பட்டா கோரி தாலுகா அலுவலகத்தில் நில அளவை பிரிவில் விண்ணப்பித்திருந்தார். இதற்காக சர்வேயர் அன்புமணி ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.  விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழிகாட்டுதலின்படி ஜோசப், ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை சர்வேயர் அன்புமணியிடம் நேற்று கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார் அன்புமணியை கைது செய்தனர்.

Related Stories: