கஞ்சா விற்பனை எஸ்எஸ்ஐ மகன் உள்பட 5 பேர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம், குன்னவயல் பகுதியில் திருக்கோகர்ணம் போலீசார் நேற்று அதிரடி சோதனை செய்தனர். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், இலுப்பூரை சேர்ந்த பிரிதிவிராஜ் (26), அவரது நண்பர் மதி (33), கியோபோஸ் (23), ஜோஸ்வா (19) மற்றும் 18 வயது சிறுவன் என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 1.100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கஞ்சா விற்பனை செய்ததாக வழக்கு பதிந்து 5 பேரையும் கைது செய்தனர். இவர்களில் கியோபோஸ், தூத்துக்குடி தெற்கு காவல்நிலைய எஸ்எஸ்ஐ மகன் என்பதும், திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து கொண்டே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

Related Stories: