நேற்று ரூ.72 குறைந்தது தங்கம் 3 நாளில் ரூ.760 சரிவு

சென்னை: சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இருப்பினும், அட்சய திருதியை தொடர்ந்து இந்த மாத துவக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. பின்னர் 2 நாட்களுக்கு ஏற்றம் அடைந்தாலும், பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை குறைந்து வந்தது. சென்னையில், கடந்த 13ம் தேதி ஒரே நாளில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.544 சரிந்தது. 14ம் தேதி ரூ.144 குறைந்து, சவரன் ரூ.37,896க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையில் மாற்றமில்லை. நேற்று மாலை வர்த்தக முடிவில் தங்கம் சவரனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.37,824க்கு விற்பனையானது. நேற்றுடன் சேர்த்து தொடர்ந்து 3 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.760 குறைந்துள்ளது. மார்ச் மாதத்துக்கு பிறகு, கடந்த மாதம் 14ம் தேதிதான் தங்கம் சவரன் ரூ.40,000ஐ தாண்டியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: