அருணாச்சல் எல்லையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது சீனா: ராணுவ தளபதி தகவல்

கவுகாத்தி: கிழக்கு லாடக் எல்லை பிரச்சனைக்கு பிறகு இந்தியா, சீனா இடையே சுமுகமான நட்புறவு நிலவுவதில்லை. அவ்வபோது, இந்தியாவையொட்டிய சர்வதேச எல்லைப் பகுதிகளில் அத்துமீறுவதை சீனா வழக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில், கிழக்கு ராணுவத் தளபதி ஜெனரல் ஆர் பி கலிதா கூறுகையில், ‘‘திபெத் பகுதியில் உள்ள உண்மையான எல்லைக் கட்டுப்பாடு கோட்டு அருகே சீனா ஏராளமான உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. சாலை அமைத்தல், ரயில் மற்றும் விமானங்கள் வந்து செல்வதற்கான வழித்தடங்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளது. அதனையொட்டிய பகுதிகளில் கிராமங்களை கட்டி உள்ளது. சீனாவின் இந்த அத்துமீறல் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. எதையும் கையாளும் தயார்நிலையில் இந்திய ராணுவம் இருக்கிறது,” என்று கூறினார்.

Related Stories: