அருணாச்சல் நிலச்சரிவில் 4 பேர் பலி

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகினர். வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல், அசாமில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அசாமில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியான நிலையில், அருணாச்சலில் நேற்று பெண் ஒருவர் உள்பட 4 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர். அருணாச்சலில் ஏற்பட்ட கனமழையால் அங்குள்ள பஞ்சாபி தாபா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பெண் ஒருவர் பலியானார். இப்பகுதியில் வீடுகள் இடிந்து தரைமட்டமானதில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். இதில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இடாநகர், பந்தர்திவா பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் தற்காலிக முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.

Related Stories: