தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்..!: சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 4 வாரத்தில் ரூ.2,576 சரிவு..!!

சென்னை: சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 4 வாரத்தில் ரூ.2,576 குறைந்துள்ளது. அண்மைக்காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. ஒரு சவரன் ரூ.40,000ஐ தாண்டி இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே சில சமயங்களில் தங்கம் விலை திடீர் சரிவாக சவரனுக்கு ரூ.500, ரூ.600 என சரிவை கண்டது. ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், கொரோனா பரவல் பற்றிய அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 4 வாரத்தில் ரூ.2,576 குறைந்துள்ளது. ஏப்ரல் 4ம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,050க்கும், சவரன் ரூ.40,400க்கும் விற்பனையானது. சர்வதேச சந்தையில் ஏப்ரல் 4ல் 1992 டாலராக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 190 டாலர் குறைந்து இன்று 1802 டாலரானது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததை அடுத்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,728க்கும், சவரன் ரூ.37,824க்கும் விற்கிறது. கடந்த மார்ச் 8ம் தேதியுடன் ஒப்பிட்டால் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.3,016 குறைந்துள்ளது. மார்ச்சில் ஒரு கிராம் ரூ.5,105 ஆகவும், சவரன் ரூ.40,840 ஆகவும் இருந்த தங்கம் தற்போது ரூ.37,824க்கு விற்கப்படுகிறது.

Related Stories: