அசாமில் தொடர்ந்து பெய்யும் கனமழை: சாலைகள், பாலங்கள், நீர்ப்பாசன கால்வாய்கள் சேதம்

திஸ்பூர்: அசாமில் கொட்டிதீர்த்த மழையால் 200 மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளனர். அங்கு சகஜநிலை திரும்ப மீட்புப்பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. திமாகஷாவ் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில், ரயில்பாதை மற்றும் சாலைகள் கடுமையாக சேதமடைந்தன. இன்னும் பல இடங்களில் இதேநிலை நீடிக்கிறது.

15 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 222 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 10,321 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. 57 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். இந்த இயற்கை சீற்றத்திற்கு இதுவரை 1 குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். லக்கிம்பூர் மற்றும் நாகூன் மாவட்டங்களில் பல சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள் சேதமடைந்துள்ளது. இடைவிடாத மழையால் தகவல் தொடர்பு வசதியும் பாதிக்கப்பட்டுள்ளது.      

Related Stories: