இந்தாண்டில் தற்போது வரை டெங்கு காரணமாக எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: இந்தாண்டில் தற்போது வரை டெங்கு காரணமாக எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய டெங்கு தடுப்பு தினம் நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, கொசு தடுப்பு மருந்து வாகனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கண்டறிய 300 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 21,000 பணியாளர்கள் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள், கொசுக்களை ஒழிக்க தேவையான மருந்து கையிருப்பில் உள்ளது. இந்தாண்டில் தற்போது வரை டெங்கு காரணமாக எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி, கன்னியாகுமாரி, தருமபுரி மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: