எந்த உழைப்பும் இல்லாமல் பெரிய வருமானம் வரும் என்கிற பேராசை வேண்டாம் :பிட்காயின் மோசடி குறித்து தமிழக டிஜிபி எச்சரிக்கை!!

சென்னை : பிட்காயின் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்வப்போது விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிடும் டிஜிபி தற்போது பிட்காயின் மோசடி குறித்து பேசியுள்ளார்.

வணக்கம் பொதுமக்களுக்கான பதிவு இது.

இப்பொழுது இணையதளத்தில் பிட்காயினில் இன்வெஸ்ட் பண்ணவைத்து மோசடி செய்வது நடந்து கொண்டிருக்கிறது. அதனை நம்பி மக்கள் முதலில் சின்ன அமௌண்ட்டை போடுகிறார்கள். அந்த அமௌண்ட்டுக்கு டபுள் அமௌண்ட்டை அவர்கள் கொடுத்துவிடுகிறார்கள். அதன்பிறகு இன்னொருமுறை இன்வெஸ்ட் பண்ணுறாங்க. அதற்கும் அமௌண்ட்டை டபுள் செய்து தருகிறார்கள். ஆனால் அடுத்தமுறை இன்வெஸ்ட் பண்ணும்பொழுது இன்னும் அதிகமாக இன்வெஸ்ட் பண்ணுங்க அப்போதான் மெம்பர்ஷிப் கிடைக்கும், அக்கவுண்டில் கொண்டு சேர்க்க முடியும் என்று பல்வேறு காரணங்களைக் காட்டி பெரிய தொகையை இன்வெஸ்ட் பண்ண வைத்து, பின்னர் ஒண்ணுமில்லாமல் பண்ணிவிட்டுறாங்க.

சென்னை கமிஷனர் சொல்லியிருக்கிறார், இந்த குற்றங்களைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு கொடுக்க வேண்டிய காவலர்களே பணத்தை விட்டு ஏமாந்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். எனவே இந்தப் பணம் போச்சுனா கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம். பணம் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போயிருச்சுனா சர்வதேச போலீசாரை நாடவேண்டி இருக்கும். சர்வதேச போலீசாராலேயே ஒன்னும் பண்ண முடியல.சென்னையில் ஒரு காவலர் 20 லட்சம், இன்னொரு காவலர் 30 லட்சத்தை இழந்திருக்கிறார்கள். வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக பேராசையைத் தூண்டி உங்களை ஏமாத்திருவாங்க. வங்கிகள் தரக்கூடிய வட்டி விகிதத்தை விட வேறு யாரும் அதிகமாக தர வாய்ப்பில்லை. எந்த உழைப்பும் இல்லாமல் பெரிய வருமானம் வரும் என்கிற பேராசை வேண்டாம். பேராசை பெருநஷ்டம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: