லக்னோவுக்கு எதிராக ராஜஸ்தான் ரன் குவிப்பு

மும்பை: லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடியாக ரன் குவித்தது. பிராபோர்ன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட் செய்தது. ஜெய்ஸ்வால், பட்லர் இருவரும் ராயல்ஸ் இன்னிங்சை தொடங்கினர். பட்லர் 2 ரன் எடுத்து ஆவேஷ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ஜெய்ஸ்வால் - கேப்டன் சாம்சன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்தனர். சாம்சன் 32 ரன் (24 பந்து, 6 பவுண்டரி), ஜெய்ஸ்வால் 41 ரன் (29 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். தேவ்தத் பட்டிக்கல் அதிரடி காட்ட, ராஜஸ்தான் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது.

Related Stories: