தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பொறுப்பேற்பு

புதுடெல்லி: நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற உள்ளது. இது தவிர, ஆந்திரா, அருணாச்சல், சட்டீஸ்கர், அரியானா, இமாச்சல், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல், 2024 மக்களவை தேர்தல் ஆகியவை விரைவில் நடைபெற உள்ளன. இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கடந்த சனிக்கிழமை ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ராஜீவ் குமார் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதன்மூலம், நாட்டின் 25வது தலைமைத் தேர்தல் ஆணையர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் வரும் 2025 பிப்ரவரி வரை இப்பதவியில் நீடிப்பார். இவர் இதற்கு முன்பு, கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேர்தல் ஆணையராகவும், அதற்கு முன்பு நிதித்துறை செயலராகவும் பணி புரிந்துள்ளார்.

Related Stories: