ஆர்கே பேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

பள்ளிப்பட்டு: ஆர்கே பேட்டை ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் ஆய்வு செய்து பார்வையிட்டார். திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே பேட்டை ஒன்றியத்தில் அம்மையார்குப்பம், சந்திரவிலாசபுரம், சந்தானவேணுகோபாலபுரம் ஆகிய ஊராட்சிகளில் நடக்கும் வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து திருவள்ளூர் கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, அம்மையார்குப்பம் ஊராட்சி சார்பில், நாற்றுப்பண்ணை திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்த்து பராமரித்து வருவதை பார்வையிட்டு, ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவனை  பாராட்டினார்.

அப்போது, நாற்றுப்பண்ணையில் வளர்த்து அனைத்து பகுதிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்குவதை அரசு அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், மகளிர் சுய உதவி குழுவினருக்கு முருங்கை செடிகள் வழங்கினார். சந்திரவிலாசபுரம், சந்தான வேணுகோபாலபுரம் ஆகிய ஊராட்சிகளில் நடக்கும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட திட்ட அலுவலர் ஜெயக்குமார், செயற்பொறியாளர் ராஜவேலு, உதவி செயற்பொறியாளர் சாந்தி, ஒன்றிய குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன், ஒன்றிய குழு துணை தலைவர் திலகவதி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செ.செ.சேகர், ராஜேந்திரபாபு, ஒன்றிய பொறியாளர்கள் சுந்தரம், சவித்திரி, ஒன்றிய கவுன்சிலர்கள் எ.பி.சந்திரன், கார்த்திகேயன், என்.உமாபதி, செல்வி சந்தோஷ், அம்மு சேகர், பிரமிளா வெங்கடேசன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெயந்தி சண்முகம் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: