ஆவடி: ஆவடி அருகே கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் முத்து (70). இவருக்கு சொந்தமாக கிரேன் வாகனம் வாடகைக்கு விட்டு வருகிறார். நேற்று மாலை முத்துவின் கிரேன் வாகனத்தை, கண்ணப்பாளையம் பகுதியை சேர்ந்த விஜய் (30) என்பவர் எடுத்து கொண்டு மேட்டுப்பாளையம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே 2 பேருடன் வேகமாக வந்த பைக், பொக்லைன் மீது மோதியது. இதில், பைக்கில் வந்த 2 பேரும், போதையில் இருந்ததால், தடுமாறி கீழே விழுந்தனர். பின்னர் அவர்கள், பொக்லைன் வாகனத்தை ஓட்டி வந்த விஜய்யை சரமாரியாக தாக்கினர். புகாரின்படி ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பரத் (27). சுதாகர் (19) என தெரிந்தது. இதையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.