தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல் பாஜ அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: பாஜ ஆட்சியில் தலித்துகளுக்கு விரோதமான நடவடிக்கைகளை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் ஊடக துறை தலைவர் ஆ.கோபண்ணா வெளியிட்ட அறிவிப்பு: மத்தியில் பாஜ ஆட்சி அமைந்து கடந்த 8 ஆண்டுகளில் தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், வன்கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. பிரதமர் மோடியின் ஆட்சி தலித்துகளுக்கு விரோதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆதிதிராவிட இளைஞர்கள் வழக்கறிஞர்கள் தொழில் தொடங்க தலா ரூ.50,000 சிறப்பு உதவி தொகை திட்டம் உட்பட 8 நல உதவி திட்டங்களுக்கான சிறப்பு நிதி உதவி (எஸ்சிஏ) வழங்குவதை ஒன்றிய பாஜ அரசு நிறுத்தியுள்ளது. இதை கண்டித்து மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார தலைமையில் 16ம் தேதி (இன்று) காலை 10 மணியளவில் சென்னை சூளை தபால் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Related Stories: