கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்: ஆ.ராசா பங்கேற்பு

பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், `ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை’ என்ற தலைப்பில் நம்மாழ்வார்பேட்டை சின்னபாபு தெருவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாநில இலக்கிய அணி புரவலர் தஞ்சை கூத்தரசன், பகுதி செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் ஆ.ராசா பேசியதாவது: அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள், எதிர் கருத்து கொண்டவர்கள், தமிழகம் எந்த நிலையில் இருந்தபோது திமுக ஆட்சிக்கு வந்தது, தற்போது எப்படி உள்ளது என்பதை உணர வேண்டும். கொரோனா தாக்கத்தின்போது களப்பணியாற்றியது திமுக தான். ஜெ.அன்பழகன் போல ஆற்றல் மிக்க பல முன்னோடிகளை கொரோனாவுக்காக இழந்தோம். கொரோனா காலத்தில் மக்களை சந்தித்த ஒரே தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான். பெண்களுக்கு உரிமை தொகை தரவில்லை என ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் குற்றம்சாட்டுகிறார்கள். 5 ஆண்டுகளில் நாங்கள் தரவில்லை என்றால் கேளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: