நெல்லை அருகே கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து 6 பேர் சிக்கிய நிலையில் 3வது நபர் உயிருடன் மீட்பு; எஞ்சிய 3 பேரை மீட்கும் பணி தீவிரம்

நெல்லை: நெல்லை அருகே கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து 6 பேர் சிக்கிய நிலையில் தற்போது 3வது நபர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மீட்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தொடர்ந்து அந்த பகுதியில் 3 முறை பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் பதிப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் உடைத்து வைத்திருந்த கற்களை லாரிகள் மூலம் எம் சாண்ட் தயாரிக்கும் பகுதிக்கு எடுத்துச்செல்லிம் பணியில் தொழிலாளர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக ராட்சச பாறை சரிந்த விழுந்ததில், தொழிலாளர்கள் 6 பேர் 300 அடி பள்ளத்தில் சிக்கி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த முன்னீர்பள்ளம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 300 அடி பள்ளத்தில் 3 ஜேசிபி இயந்திரம் மற்றும் இரண்டு லாரிகள் சிக்கியுள்ளது.

ராட்சச பாறை விழுந்த இடத்தில் இருந்து இருவர் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய 4 பேரை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. மீட்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தொடர்ந்து அந்த பகுதியில் 3 முறை பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் பதிப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில்,17- மணி நேர போராட்டத்திற்கு பிறகு 3-வது நபர்  செல்வம் பத்திரமாக மீட்கப்பட்டார். எஞ்சிய 3 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories: