ஐ.பி.எல் கிரிக்கெட் இன்று 2 ஆட்டம்; ராஜஸ்தான் அணியுடன் மோதல் பிளே ஆப் சுற்றில் நுழையுமா லக்னோ? பிற்பகல் குஜராத்துடன் சென்னை பலப்பரீட்சை

மும்பை:ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 62வது லீக் போட்டி குஜராத்-சென்னை அணிகள் மோதுகின்றன.சென்னை இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 8 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது. பிளே ஆப் வாய்ப்பை இழந்த சென்னை எஞ்சிய 2 போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வென்று புள்ளி பட்டியலில் முன்னேறிச் செல்ல முயற்சிக்கும். அறிமுக அணியான குஜராத் அணி 12 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றுவிட்டது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இன்றும் சென்னையை வீழ்த்தும் நோக்கில் அந்த அணி களம் இறங்குகிறது.

இதையடுத்து இரவு 7.30 மணிக்கு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 63வது லீக் போட்டியில் லக்னோ-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. லக்னோ 12 போட்டிகளில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 2வது இடம் வகிக்கிறது. இன்று ராஜஸ்தானை வீழ்த்தினால் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துவிடும். ராஜஸ்தான் அணி 12 போட்டிகளில் 7 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது  இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு பிரகாசமாகும். எனவே இன்றைய போட்டியில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் லக்னோவும் அதே வாய்ப்பை பெறவேண்டும் என்பதில் ராஜஸ்தானும் முனைப்பு காட்டும் என்பதால் ஆட்டத்தில் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: