திமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டி

சென்னை: தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

1. தஞ்சை சு.கல்யாணசுந்தரம்

2. கே.ஆர்.என். ராஜேஷ்குமார்

3 ரா. கிரிராஜன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சு.கல்யாணசுந்தரம் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவார். மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories: