இறுதி போட்டியில் இன்று இந்தியா - இந்தோனேசியா மோதல்

பாங்காக்: தாமஸ் கோப்பை பேட்மின்டன் தொடரின் பைனலுக்கு முதல் முறையாக முன்னேறி சாதனை படைத்துள்ள இந்திய ஆண்கள் அணி, பரபரப்பான இறுதிப் போட்டியில் இன்று இந்தோனேசியாவுடன் மோதுகிறது.அரையிறுதியில் நேற்று முன்தினம் டென்மார்க் அணியை எதிர்கொண்ட இந்தியா 3-2 என்ற கணக்கில் போராடி வென்று சாதனை படைத்தது. தாமஸ் கோப்பை பேட்மின்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது இதுவே முதல் முறையாகும்.

நடப்பு தொடரில் கிடாம்பி ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய், லக்‌ஷியா சென், சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி, கிருஷ்ண பிரசாத் - விஷ்ணுவர்தன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றிகளைக் குவித்து வருவதால், இம்முறை தங்கப் பதக்கம் வென்று அசத்துமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே சமயம், ஒரு ஆட்டத்திலும் தோல்வியை சந்திக்காமல் பைனலுக்கு முன்னேறி உள்ள இந்தோனேசிய அணியை வீழ்த்துவது, இந்திய அணிக்கு மிகப் பெரிய சவாலாகவே இருக்கும்.

Related Stories: