×

பீகாரில் முதல்வர் ஆய்வு செய்துவிட்டு சென்ற சிலமணி நேரத்தில் உடைந்த ஆற்றங்கரை; ஊருக்குள் தண்ணீர் புகுந்தது..!!

சிதாமார்ஹி: பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆய்வு செய்துவிட்டு சென்ற சிலமணி நேரத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் ஆற்றங்கரை உடைந்ததால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. சிதாமார்ஹி மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் லவாஹே ஆற்றில் பழைய நீர் வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிய 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பழைய நீர்வழி தடத்தில் நடைபெற்று வரும் பணிகளை நேற்று ஆய்வு மேற்கொண்ட நிதிஷ்குமார், நீரை திறந்துவிட உத்தரவிட்டார்.

இதனையடுத்து ஆய்வை முடித்துக்கொண்டு அவர் சென்ற சிறிது நேரத்தில் ஆற்றங்கரை உடைந்ததால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. நீர்வழித்தடத்தை சீரமைப்பதன் வாயிலாக அருகில் உள்ள கிராமங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் ஆய்வு செய்துவிட்டு சென்ற சிறிது நேரத்தில் கரை உடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Bihar ,Chief Minister , Bihar Chief Minister, Research, Riverside
× RELATED பீகார் முதல்வரிடம் 6ம் வகுப்பு மாணவன்...