×

மரணபயம் காட்டிய கொரோனா...மெல்ல மீளும் மக்கள் : உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 47.48 கோடியாக உயர்வு

வாஷிங்டன் : உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.02 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 798-ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 90 லட்சத்து 89 ஆயிரத்து 355 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 47 கோடியே 48 லட்சத்து 93 ஆயிரத்து 985 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 86 ஆயிரத்து 458 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Corona on the verge of death ... People slowly recovering: The number of people recovering from corona infection in the world has risen to 47.48 crore
× RELATED உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்...