×

சில்லி பாயின்ட்...

* கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர்   பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரலியோ), இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக  ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். மேலும், சிகிச்சைக்காக உடனடியாக நாடு திரும்பியுள்ளார்.

* சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடும் வேகம் உம்ரன் மாலிக், நடப்பு  ஐபிஎல் தொடரில் அதிவேகத்தில் பந்து வீசிய சாதனையை படைத்துள்ளார்.  தொடர்ந்து 155 கிமீ வேகத்தில் பந்து வீசி வரும் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல், ‘உம்ரன் மாலிக்  பாகிஸ்தானில் இருந்திருந்தால்  சர்வதேச போட்டிகளில் விளையாடி இருப்பார். இந்தியாவில் இப்போது பும்ரா, சைனி, சிராஜ், ஷமி என  தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய உள்ளனர். அதனால்தான் அவர்களுக்கு வீரர்களை தேர்வு செய்வது கடினமாகி உள்ளது’ என்று கூறியுள்ளார்.

* பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன்  பிஸ்மா மரூப் (30).  அவர் சமீபத்தில் நியூசிலாந்தில் நடந்த டி20 உலக கோப்பையில் விளையாட தனது கைக்குழந்தை, அம்மாவுடன் சென்றிருந்தார். இந்நிலையில், இங்கிலாந்தில் ஜூலையில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில்  பிஸ்மா குழந்தையுடன் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் அணியில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாக கூறப்படுகிறது.


Tags : Chilli Point , Roulette Point ...
× RELATED சில்லி பாயின்ட்...