எடப்பாடி 69வது பிறந்தநாள் சேலத்தில் கொண்டாடினார்

சேலம்: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், செம்மலை, எம்.சி.சம்பத், கருப்பணன், மாதவரம் மூர்த்தி, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், முன்னாள் எம்பி பன்னீர்செல்வம், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல், பாமக எம்எல்ஏ அருள், அதிமுக எம்எல்ஏக்கள் சுந்தர்ராஜன், ராஜமுத்து, பாலசுப்பிரமணியம், சித்ரா, மணி  மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் பலர் நேரில் வந்து பூங்கொத்து கொடுத்தும் மாலை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.  இதையொட்டி நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்.

Related Stories: