அறிவுத்திறன் குறையும் அபாயம்?!

நன்றி குங்குமம் டாக்டர்

* தகவல்

‘உலகில் அதிகரித்துவரும் கார்பன்டை ஆக்ஸைடால் சுற்றுச்சூழல் மட்டும் பாதிப்பதில்லை. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், அறிவாற்றல் பணிகளைச் செய்வதற்கான மக்களின் சிந்தனைத்திறனையும் பாதியாகக் குறைக்கக்கூடும்’ என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சமீபத்தில் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகம் மற்றும் பென்சில்வேனிய பல்கலைக்கழத்தின் விஞ்ஞானிகள் மட்டுமல்லாது, அமெரிக்காவின் புவி இயற்பியல் ஒன்றியத்தின் வருடாந்திர கூட்டத்தொடரில் இந்த கருத்தை  விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.அதிக அளவு கார்பன்டை ஆக்ஸைடு வெளிப்பாடுகளுக்கிடையே வாழும் மனிதர்கள், சிக்கலான சிந்தனையின் நடவடிக்கைகளின் முடிவில் 50 சதவீதம் குறைவாக இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.


உத்திகளைத் திட்டமிடுவது, நெருக்கடிக்கு பதிலளிப்பது, முடிவுகளை எடுப்பது மற்றும் இலக்கை அடைய புதிய தகவல்களைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். 2015-ம் ஆண்டில் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள், கார்பன்டை ஆக்ஸைடு நிறைந்த ஒரு அறையில், 24 அலுவலகப் பணியாளர்களை, 6 நாட்கள் வேலை செய்ய வைத்து ஓர் ஆய்வு மேற்கொண்டனர். ஒவ்வொரு நாளின் பிற்பகலிலும் பங்கேற்பாளர்களை, கற்பனையான ஒரு நகர மேயராக நிர்வகிப்பது போன்று உருவகப்படுத்தும் காட்சியில் பங்கேற்க வைத்தனர்.

ஒரு கம்ப்யூட்டர் மென்பொருள் மூலம் பங்கேற்பாளர்களின் அறிவாற்றல் கண்காணிக்கப்பட்டது. கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகரித்ததால், பங்கேற்பாளர்களின் தகவல் பயன்பாடு, முடிவெடுப்பதில் தடுமாற்றம் மற்றும் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் தொடர்ந்து போராடினார்கள் என முடிவுகள் காண்பித்தன. இதே முடிவுகள் மாணவர்களிடத்தில் மேற்கொண்ட ஆய்விலும் தெரிய வந்தன. இதிலிருந்து நாம் எச்சரிக்கையாக வேண்டிய செய்திகள் இரண்டுதான். நம் பங்குக்கு சுற்றுச்சூழலை மாசுபடுத்திவிடக் கூடாது. இது இந்த பூமிக்கு நாம் செய்யும் நன்மை. சுத்தமான காற்றோட்டம் இல்லாத இடத்தில் பணிபுரியவோ, உறங்கவோ கூடாது. இது நம் தனிப்பட்ட வாழ்வுக்கு செய்யும் ஆகப் பெரும் நன்மை!

- என். ஹரிஹரன்

Tags :
× RELATED அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் அபாயம்